Monday, January 6, 2014

[omkarakudil:139] வணக்கங்களும், நன்றிகளும், வேண்டுதலும்.

அரங்கர் நாமம் வாழ்க!                                                                                                                              ஓங்காரக்குடில் வாழ்க!
அகத்தியர் குலத்தை சார்ந்த அன்பர்களுக்கு,

               திருச்சி திருவிளக்கு பூஜை விழாக்குழுவின் வணக்கங்கள்.

                        தங்கள் அனைவரின் தார்மீக ஒத்துழைப்பால், திருச்சியில் நடைபெற்ற வள்ளலார் திருவிளக்கு பூஜை, மிகவும் சிறப்பான முறையில் 7000 நபர்கள் பூஜையில் கலந்து கொண்டும், 15,000 க்கும் மேற்ப்பட்டோர் அன்னதானத்தில் பங்குபெற்றும், இறையருள் பெற்று சென்றுள்ளனர்.

அதுமட்டுமின்றி, தங்களது உழைப்பின் எதிரொலியாக பல இலட்ச ரூபாய் குருநாதரிடம் அன்னதானத்திற்கு கொடுக்கப்பட்டு உள்ளது என்பதை மிகவும் மனமகிழ்வுடன் தெரிவித்துக் கொள்கிறோம்.

இந்த விழாவிற்கு நேரடியாகவும், மறைமுகமாகவும், ஒத்துழைப்பு நல்கி உதவிய அனைத்து நல் உள்ளங்களுக்கும் எங்களது சிரம்தாழ்ந்த நன்றிகளையும், வணக்கங்களையும் தெரிவித்து கொள்கிறேன்.

குருநாதரின் வாக்கு: விழாவில் ஆதி தலைவன் சுப்ரமண்யரும், அருட்பெருஞ்ஜோதி வள்ளல் இராமலிங்க சுவாமிகளும் வந்திருந்து, பாதுகாப்பு கொடுத்து ஆசி வழங்கி உள்ளதாக தெரிவித்து உள்ளார்கள்.

விழாவில் தங்களை கவனிப்பதில் ஏதேனும் குறைபாடு இருப்பின் அதற்கு எங்களது மனமார்ந்த வருத்தத்தை இதன் மூலம் தெரிவித்துக் கொள்கிறோம்.

முக்கிய வேண்டுகோள்:
ஓங்காரக்குடிலாசான் வெளித்தோன்றி ஞானச்சித்தர் காலம் மேலோங்க அனைவரும் இந்த வேண்டுகோளை ஏற்று, நம்மால் முடிந்தவரை பிறரையும் இந்த வேண்டுகோளை சொல்லச் செய்ய வேண்டுமாய் அன்போடு வேண்டுகிறோம். நாம் கேட்டால் மட்டுமே அவர் வருவார்..................
முருகா, ஞானப்பண்டிதா, சாந்த சொரூபியே, பூவுலகில், அதர்மம் ஒழிந்து, தர்மத்தை நிலைநாட்ட, செங்கோலாட்சி நடைபெற, சத்தியவான் ஆட்சி நடைபெற, முருகா கருணை கொண்டு நீ வர வேண்டும், எங்களுக்கு நல்வழி காட்ட நீ வர வேண்டும் தாயே, தயாபரனே, வருவாய் அப்பா, நீ வரவேண்டும் அப்பா...........


தொடர்ந்து உங்களது ஒத்துழைப்பு வேண்டி ..........

விழா குழுவினர் மற்றும் உங்கள் ந. பிரபு.
கைபேசி: 919894599372

--
Parent Homepage : www.agathiar.org
---
You received this message because you are subscribed to the Google Groups "omkarakudil" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to omkarakudil+unsubscribe@googlegroups.com.
To post to this group, send email to omkarakudil@googlegroups.com.
Visit this group at http://groups.google.com/group/omkarakudil.

No comments:

Post a Comment