Friday, September 6, 2013

[omkarakudil:106] ஓங்காரக்குடில் இது ஞானிகளின் கோவில்

ஆசான் அரங்கமகாதேசிக சுவாமிகள் அவர்கள் உலகமக்களை கடவுளின் பிள்ளையாகப் பார்த்து அவர்களின் துன்பங்கள் துயரங்களிருந்து விடுவித்து ஞானிகளின் திருவடிதான் உண்மை ஆன்மீகம் என்று அவ்வழியில் நம்மையும் அழைத்துச் சொல்கிறார்.

இங்கே சுவையான உணவு, மன ஆறுதல்.தொண்டர்கள் மனதில் போட்டி, பொறாமை, வஞ்சனை இருக்காது. அப்படியிருப்பவர்கள் குடிலில் இருக்கவும் முடியாது. இங்கு சமையற்கலை நிபுணர்கள் எவரும் கிடையாது ஆனால் சுவையாகவும், தரமானதாகவும் உணவு இருக்கும். எப்படி? ஆசானின் ஆசி உள்ளவர்கள் எதை தொட்டாலும் துலங்கும். எல்லா அன்பர்களுக்கும் இங்கு தொண்டு செய்ய வாய்ப்பிருக்கு.

ஆசானை அதற்கென ஒதுக்கப்பட்டுள்ள நேரத்தில் எவரும் சந்திக்கலாம். அதற்கென கட்டணங்கள் எதுவும் கிடையாது. நீங்கள் விரும்பினால் தொண்டுகள் செய்யலாம் அன்றி கட்டாயம் கிடையாது. ஓங்காரக்குடிலாசான் நம்மிடம் கேட்பது ஒன்றே ஒன்று தான் தினமும் அரை மணி நேரமாவது ஞானிகளுக்கு பூசை செய்யுங்கள். உங்களின் வாழ்கையில் மாற்றங்களை காண்பீர்கள். உங்களால் முடிந்தால் ஓங்காரக்குடிலுக்கு ஒரு முறை சென்று வாருங்கள். ஆசான் அரங்கமகா தேசிகர் திருவடியை இறுகப் பற்றுங்கள்.


 நாள் தோறும் பல்லாயிரக்கணக்கான மக்களின் பசிப்பிணியை அகற்றுவதால் துறையூரைச் சுற்றியுள்ள எந்த ஊரிலும் பிச்சைக்காரர்கள் இல்லை. வழிப்பறி செய்வோர் இல்லை. வறுமை இல்லை. துறையூர் இருபது ஆண்டுகளுக்கு முன்பு எப்படி இருந்தது இப்போது எப்படி இருக்கிறது என்பதை அங்கு வாழும் மக்களிடம் கேட்டால் தெரிந்து கொள்ளலாம். உங்களால் நேரடியாக ஏழைகளுக்கு உதவ முடியா விட்டால் ஓங்காரக்குடில் வழியாக உதவி செய்யுங்கள். ஒரு முறை இந்த புனித தலத்திற்கு விஜயம் செய்யுங்கள். மாற்றங்களைக் காண்பீர்கள்.

 ஓங்காரக்குடில் சாதி,மத,மொழி, இன பேதமின்றி அனைவருக்கும் தாயன்புடன் பசியாற்றும் இடம். இது ஓர் ஆன்மீகப்பயிற்சிக் கூடம். இங்கு ஞானம் கற்று கொடுப்பதில்லை. ஒங்காரக்குடில் உங்களுக்கு ஞானத்தை கற்று கொள்ள வாய்ப்பை உருவாக்கி தந்துள்ளது. ஆனால் நாம் நாள்தோறும் பூஜிக்கும் மகான்கள் உங்களுக்கு ஞானத்தை அடைய உறுதுணையாய் இருப்பார்கள்.

--
Regards                                      

Vijayakumar
Mobile : 96 7711 5690
--
Parent Homepage : www.agathiar.org
---
You received this message because you are subscribed to the Google Groups "omkarakudil" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to omkarakudil+unsubscribe@googlegroups.com.
To post to this group, send email to omkarakudil@googlegroups.com.
Visit this group at http://groups.google.com/group/omkarakudil.

No comments:

Post a Comment