தமிழ்நாட்டில் இருக்கும் மகான்கள்,துறவிகள்,சித்தர்களின் ஜீவசமாதிகள் இருக்குமிடங்கள்: பகுதி 2
நாம் நமது வீட்டில் ஒரு மந்திரத்தை ஒரு முறை ஜபித்தால்,பத்துமுறை ஜபித்தமைக்கான பலன்கள் கிடைக்கும்;
நமது ஊரில் இருக்கும் பழமையான சிவாலயத்தில் ஒரு முறை ஒரு மந்திரத்தை ஜபித்தால்,1000 முறை ஜபித்ததற்கான பலன்கள் கிடைக்கும்;
மலை மேலே இருக்கும் ஒரு கோவிலில் ஒரு மந்திரத்தை ஒருமுறை ஜபித்தால்,1,00,00,000 தடவை ஜபித்தபலன்கள் நம்மை வந்து சேரும்;
கடலோரக்கோவிலில் ஒரு மந்திரத்தை ஒருமுறை ஜபித்தால்,2,00,00,000 தடவை ஜபித்ததற்குரிய மந்திர ஜபசக்தி நமக்கு உருவாகும்;
இந்த எண்ணிக்கை சாதாரண நாட்களில்,ஜபித்தால் கிடைக்கும் எண்ணிக்கை ஆகும்.இதே மந்திரஜபத்தை தமிழ் வருடப்பிறப்பு,தமிழ்மாதப்பிறப்பு,அமாவாசை,பவுர்ணமி,கிரகண நாட்களில் ஜபித்தால்,மேலே கூறிய எண்ணிக்கையோடு 100 கோடி மடங்கு பலன்களாக நம்மை வந்து சேரும்.
எந்த ஒரு மந்திரத்தையும் நாம் 1,00,000 தடவை ஜபித்தபின்னரே,அந்த மந்திரத்துக்கு உயிர் உண்டாகி,நம்மை பாதுகாக்கத் துவங்கும்;ஆனால்,நாம் ஓம்சிவசிவஓம் மந்திரஜபம் மட்டும் 10,000 தடவைகளுக்கு ஜபித்துவிட்டாலே,ஓம்சிவசிவஓம் நம்மை பாதுகாக்கத் துவங்கும்;1,00,000 தடவை ஓம்சிவசிவஓம் ஜபிக்கும்வரையிலும்,நமக்கு ஓம்சிவசிவஓம் ஜபிக்கமுடியாத அளவுக்கு பல தடைகள் வரத்தான் செய்யும்;நமது மன உறுதியாலும்,குருபக்தியாலும்,சிவபெருமானாகிய அண்ணாமலையாரின் மீதான பாசத்தாலும் அந்த தடைகளை முறியடித்து,ஓம்சிவசிவஓம் ஜபத்தை ஒரு லட்சம் தடவை வரை ஜபித்துமுடித்துவிட வேண்டும்;அதன் பிறகு ஒரு நாளுக்கு 108 முறை அல்லது 15 நிமிடம் வரையிலும் ஓம்சிவசிவஓம் ஜபித்துவருவது நல்லது & அவசியம்.இப்படி தினமும் 108 முறை வீதம் நமது ஆயுள் முழுவதும் ஒரு நாள்கூட விடாமல் ஓம்சிவசிவஓம் ஜபித்துவர வேண்டும்.
நீதி ,நேர்மை,தர்மப்படி வாழ்ந்துவருபவர்களில் பெரும்பாலானவர்களை உடன்பிறந்தோர்,பெற்றோர்,வாழ்க்கைத் துணை,குழந்தைகள் கூட ஆதரிப்பதில்லை;உதவுவதில்லை;அதே சமயம்,நீதியை நேர்மையைப் பின்பற்றுபவர்களுக்கு ஒரு நிரந்தரமான வேலை அல்லது தொழில் அல்லது போதுமான செல்வச் செழிப்பு இல்லாத நிலை இருந்தால்,அவர்கள் பணத்துக்கு அடிமையாகியிருக்க வேண்டும்.பணத்துக்காக பலர் தனது நேர்மையான,நீதியான வாழ்க்கையை தொலைத்துவிட்டு,கலியின் கொடுமையால் அநீதியான,பேராசை மிகுந்த வாழ்க்கை வாழ்ந்து வருகிறார்கள்.இப்படிப்பட்ட சூழ்நிலையே இந்த கலிகாலத்தில் இருக்கிறது.இருந்தும் கூட,பணக்கஷ்டம் வந்தபோதும் கூட,தர்மம்,நீதி,நேர்மையைக் கைவிடாதவர்கள் சில ஆயிரம் பேர்கள் தமிழ்நாடு முழுவதும் வாழ்ந்து வருகிறார்கள்.இவர்களைத் தான் ஆன்மீகக்கடல் தேடிக்கொண்டிருக்கிறது;இவர்களுக்குத் தேவையான தெய்வீக சக்தியை,நியாயமான செல்வ வளத்தை இந்த ஓம்சிவசிவஓம் மந்திரஜபம் தரும்;
இவர்கள் செய்ய வேண்டியதெல்லாம் பின்வரும் ஜீவசமாதிகளில் தினமும் 15 நிமிடம்,மஞ்சள் துண்டு விரித்து,கிழக்கு அல்லது வடக்கு நோக்கி அமர்ந்து ,இரு உள்ளங்கைகளிலும் தலா ஒரு ருத்ராட்சத்தை வைத்து,ஓம்சிவசிவஓம் ஜபிக்க வேண்டும்.இப்படிச் செய்துகொண்டே வர வேண்டும்.இதுவே இந்த தர்மவான்களுக்குத் தேவையான தெய்வீக பாதுகாப்பு,செல்வ வளம்,மன வலிமை,உடல் நலத்தைத் தந்துவிடும்.
இப்படி இருப்பவர்களும் தொடர்ந்து தர்மப்படி வாழமுடியாத அளவுக்கு ஏதாவது ஒரு கெட்டபழக்கத்தில் வீழ்ந்து கிடக்கிறார்கள்;உதாரணம் :காதல்,கள்ளக்காதல்,இணையத்தில் இருக்கும் காம இணையதளங்களுக்கு அடிமையாகிவிடுதல்,சூதாட்டம்,கிரிக்கெட் பைத்தியம்,குடிப்பழக்கம்,போதை மருந்துகள் அடிக்கடி பயன்படுத்துவது, மனைவி அல்லது சகோதரி அல்லது மகள் அல்லது தாயை தினமும் அழவைத்துப் பார்ப்பது(அப்படி ஒரு வக்கிரமான குணம்=சாடிஸ்ட்);அரசியலில் ஜெயிக்க மாட்டோம் என்று தெரிந்தும் கூட அரசியல் கட்சியில் தீவிரமாக உழைப்பது;யாருக்கோ உழைத்து அவர்களை பணக்காரராக்குவது; காம மயத்தால் தனது மனைவி மற்றும் குழந்தைகளை கவனிக்காமல் இருப்பது; வாரம் ஒருமுறை கூட மனைவியிடம் தாம்பத்திய உறவு வைத்துக்கொள்ளாமல் இருப்பது; தனது குழந்தைகளின் பாச ஏக்கத்தைப் புரிந்து கொள்ளாமல் இருப்பது; பிறரது கள்ள உறவுகளுக்கு பக்கபலமாக இருப்பது. . . என்று பலவிதமான தவறுகளில் சிக்கியிருப்பவர்கள் அதிலிருந்துமீள முடியாமல் தவிப்பார்கள்;
அப்படி மீள விரும்புவோர்,ஒரு நாளுக்கு 15 நிமிடம் வீதம் தினமும் ஓம்சிவசிவஓம் ஏதாவது ஒரு ஜீவசமாதிக்குச் சென்று ஜபித்து வர வேண்டும்;45 முதல் 90 நாட்களுக்குள் தவறான பழக்கம் எதுவாக இருந்தாலும்,தவறான குணம் எப்படிப்பட்டதாக இருந்தாலும் அதிலிருந்து மீண்டு விடுவார்கள்.அதன்பிறகும் விடாமல் தினமும் உங்களது ஊரில் இருக்கும் ஜீவசமாதியில் ஓம்சிவசிவஓம் ஜபித்துவர வேண்டும்.
சென்னையில் இருக்கும் ஜீவசமாதிகளின் பட்டியலும்,இருப்பிடமும்
திருவொற்றியூர்: பட்டினத்தார்= கடற்கரையை ஒட்டி பட்டினத்தார் கோவில் வீதி.ஆவணி மாதத்தில் வரும் உத்ராடம் நட்சத்திரத்தன்று வருடாந்திர குருபூஜை.
பாடகச்சேரி ராமலிங்கசாமிகள்= பட்டினத்தார் கோவில் வீதியில் இவரது பெயருள்ள மடம்
ஐகோர்ட் சாமி என்ற அப்புடுசாமி= பாடகச்சேரி ராமலிங்க சாமிகள் மடத்துள் இருக்கிறது.
அருள்மிகு யோகீஸ்வரர் சாமி=வடிவுடையம்மன் கோவில் அருகில் தட்சிணாமூர்த்தி ஆலயம் ஸ்தாபித்தவர்.
பரஞ்சோதி மகான்= டோல்கேட் பஸ் ஸ்டாப் அருகில் 4,தங்கம் மாளிகை அருகில்.
ஞானப்பிரகாச சாமிகள்= வடக்கு மாடவீதி 145/30 இல் சிவாமிர்த ஞான ஆசிரமத்தில் பஞ்சலோக சிலை பிரதிஷ்டை.
மவுன குரு சாமிகள்= கடற்கரையோரம் சமாதி கோவில்.
முத்துக்கிருஷ்ண பிரம்மம்=ஆஞ்சநேயர் கோவில் பஸ் ஸ்டாப் அருகில் உள்ள அருணாச்சலேஸ்வரர் கோவில் எதிரே சமாதி; கார்த்திகை மாத சதயம் நட்சத்திரத்தன்று குரு பூஜை;
ஞானசுந்தர பிரம்மம்= முத்துக்கிருஷ்ண பிரம்மம் சமாதி அருகில் ஞான சுந்தர பிரம்மம் சமாதி.சித்திரை மாத உத்திராடம் நட்சத்திரத்தன்று வருடாந்திர குருபூஜை!!
ராயபுரம்:குணங்குடி மஸ்தான் சாயபு= காய்கறி மார்க்கெட் பின்புறம் பிச்சாண்டி தெருவில் உள்ளது.
ஞானமாணிக்கவாசக சிவாச்சாரியார் சித்தர்= மன்னார்சாமி கோவில் தெரு பழைய பாலம் இறக்கத்தில் உள்ள ருத்ர சோமநாதர் கோவிலில் சமாதி .
வியாசர் பாடி:சிவப்பிரகாச சாமி=இரவீஸ்வரர்-மரகதாம்பாள் கோவிலில் சமாதி கோவில்.
கரபாத்திர சிவப்பிரகாச சாமி=1 வது தெரு சாமியார் தோட்டம் அம்பேத்கர் கல்லூரி அருகில்.பங்குனி உத்திராடம் நட்சத்திரத்தன்று வருடாந்திர குருபூஜை!!
பெரம்பூர்:அந்துகுருநாத சுவாமிகள்=மாதவரம் நெடுஞ்சாலை பிரசன்ன விநாயகர் கோவிலில் சமாதி கோவில்-பஞ்சமுக வடிவமும் உள்ளது.
மதனகோபாலசாமி=மேல்பட்டி பொன்னப்பமுதலி தெரு ஈஸ்வரி கல்யாண மண்டபம் எதிரில் சமாதி கோவில்;
சந்திர யோகி சுவாமி=மங்களபுரம் ஐந்துலைட் அருகில்.
வேர்க்கடலை சுவாமி=அய்யாவு தெரு,திரு.வி.க.நகர்.
மதுரை சாமி=செம்பியம் வீனஸ் தியேட்டர் 2 வது குறுக்குத் தெரு வலது பக்கம் மதுரை சாமி மடத்தில்.
மயிலை நடராஜ சுவாமி=கொளத்தூர்- பெரவள்ளூர் செல்லியம்மன் கோவில் பின்புறம்.
ஓட்டேரி:ஆறுமுகச்சாமி=173/77 டிமலஸ் சாலை,பெரம்பூர் பேரக்ஸ் ரோடு-ஓட்டேரி மயானத்தில் சமாதி கோவில்-உருவப்பட பூஜை.
புரசைவாக்கம்: வீரசுப்பையா சுவாமி= புவனேஸ்வரி தியேட்டர் எதிரில்-52,பெரம்பூர் பேரக்ஸ் ரோடு மடத்தில் சமாதி கோவில்.
ஈசூர் சச்சிதானந்த சாமி=கொசப்பேட்டை சச்சிதானந்தா தெரு(வசந்தி தியேட்டர் அருகில்) சமாதி கோவில்.
எழும்பூர்:மோதி பாபா=422,பாந்தியன் சாலை போலீஸ் கமிஷனர் அலுவலகம் எதிரில் தர்கா.
அனந்த ஆனந்த சுவாமி மற்றும் சபாபதி சுவாமி=பாலியம்மன் கோவில் பின்புறம் சாமியார் தோட்டத்தில் இருவரது சாமதி கோவில்-ஐப்பசி திருவாதிரை நட்சத்திரத்தன்று வருடாந்திர குருபூஜை.
நுங்கம்பாக்கம்:கங்காத சுவாமி=ஹாரிங்டன் ரோடு 5 வது அவென்யூ ஜெயவிநாயகர் கோவிலில் சமாதி.
நாதமுனி சாமி=ஹாரிங்டன் ரோடு,பச்சையப்பன் கல்லூரி பின்வாசல் அருகில் நாதமுனி மடத்தில் சமாதி கோவில்.
பன்றிமலை சாமி=5,வில்லேஜ் ரோட்டில் 'ஓம்நமச்சிவாய'என்ற பெயரில் ஆஸ்ரமத்தில் சமாதி.
ஆதிசேஷானந்தா=நுங்கம்பாக்கம் காவல் நிலையத்தின் பின்புறம் ஆதிசேஷானந்தா கோவிலில் சமாதி.
வீரமாமுனிவர்=நுங்கம்பாக்கம் புஷ்பா நகர் காவல்நிலையம் எதிரில் அசலத்தம்மன் கோவில்.
கோடம்பாக்கம்: ஸ்ரீபரமஹம்ஸ ஓங்கார சாமி=அசோக் நகர்-சாமியார் மடம் டாக்டர் சுப்பராயன் நமர் சாமியர் மடம் ஞானோதய ஆலயம்-ஸ்ரீபரமஹம்ஸ ஓங்கார சாமிபீடம்.
வடபழனி:அண்ணாசாமி,ரத்தினசாமி,பாக்கியலிங்கசாமிகள்=வடபழனி முருகன் கோவில் உருவாக இந்த மூவரும் காரண கர்த்தாக்கள்.இவர்களது சமாதி கோவில் முருகன் கோவில் பின்புறம் நெற்குன்றம் பாதையில் வள்ளி திருமண மண்டபம் அருகில்.
மைலாப்பூர்:திருவள்ளுவர்-வாசுகி அம்மையார்=லஸ் அருகில் திருவள்ளுவர் கோவிலில்.
அப்பர் சாமிகள்=171,ராயப்பேட்டை ஹைரோடு-சமஸ்க்ருத கல்லூரி எதிரில்,மைலாப்பூர் அப்பர் சாமிகள் சமாதி உள்ளது.
குழந்தைவேல் சுவாமி=சித்திரகுளம் எஸ்.டி.பி.கில்டு பில்டிங்கில் இருக்கிறது.
முத்தையா சாமிகள்=குழந்தைவேல் சாமிகள் சீடர்-அவரது சமாதி அருகில்.
ஆலந்தூர்:தாடிக்கார சுவாமி=ஆலந்தூர் ஈ.பி.அலுவலகம் தாடிக்காரசாமி தெரு-பழைய எண்:23-24 இடையே சந்து.உள்ளே தாடிக்கார சாமியின் சிறிய ஜீவ சமாதி கோவில்.சிவலிங்க பிரதிஷ்டை.
குழந்தைவேல பரதேசி=ஆலந்தூர் ஈ.பி.அலுவலகம் பின்புறம் 53,சவுரித்தெரு,எஸ்.ஆர்.மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி வாயிலுக்குக் கீழ்ப்புறம் சமாதி கோவில்.
கிண்டி:சாங்கு சித்தர் சிவலிங்க நாயனார்=எம்.கே.என்.ரோடு 36 ஆம் எண்-சாங்கு சித்தர் சிவலிங்கநாயனார் சமாதி கோவில்-சிவலிங்க பிரதிஷ்டை.இத்துடன் இவரது சீடர்கள் ஸ்ரீகொல்லாபுரி சாமி,ஸ்ரீஏழுமலை சாமிகளின் சமாதி,ஆனி மாத பவுர்ணமியன்று வருடாந்திர குருபூஜை.
சத்யானந்தா கோழீபீ சித்தர்=பஸ் ஸ்டாப் அருகில் உள்ள சாய்பாபா கோவில் வளாகத்தில்.
திருவான்மியூர்:பாம்பன் சுவாமிகள்-கலா சேத்ரா அருகில் திருமட வளாகத்துள் ஸ்ரீபாம்பன் சுவாமிகள் சமாதி ஆலயம்.ஸ்ரீமுருகக்கடவுள் பிரதிஷ்டை.
வால்மீகி=மருந்தீஸ்வரர் கோவில் எதிரில் சிறிய கோவில்.
சர்க்கரை அம்மாள்=75,கலா சேத்ரா ரோடு,
வேளச்சேரி:சிதம்பரச்சாமி என்ற பெரியசாமி=காந்தி சாலை திருப்பம்-1,வேளச்சேரி மெயின் ரோடு-சிவலிங்க பிரதிஷ்டை.
ராஜகீழ்ப்பாக்கம்:சச்சிதானந்த சற்குரு சாமிகள்=அகண்ட பரிபூரண சச்சிதானந்த சபையின் சமாதி.
பெருங்குடி:நாகமணி அடிகளார்=கந்தன் சாவடி பஸ்ஸ்டாப் – நாகமணி அடிகளார் சாலை அம்மன் கோவிலுகுள்.
நங்கநல்லூர்:மோனாம்பிகை-ஞானாம்பிகை- சாதுராம்
இம்மூவரின் சமாதி பிளாட் 21,பொங்கி மடம்(மாடர்ன் உயர்நிலைப் பள்ளி அருகில்)-ஸ்டேட் பாங்க் காலனி
சிட்லப்பாக்கம்:சாயி விபூதி பாவா= 83,முதல் மெயின் ரோடு,ஹெச்.சி.நகர்-சிட்லப்பாக்கம் பாலம் இறக்கத்தில் சமாதி கோவில்-அருகில் குமரன் குன்றம் மலைக்கோவில்.
தாம்பரம்: எதிராஜ ராஜயோகி-ஊரப்பாகம் அருகில் கரணை புதுச்சேரியில் இவரது சமாதி கோவில் இருக்கிறது.
படப்பை:துர்கை சித்தர்-ஜெயதுர்கா பீடம் கோவில்.
பெருங்களத்தூர்: ஸ்ரீமத் சதானந்தசாமி- ஆலம்பாக்கம் சதானந்தபுரம்- பெருங்களத்தூரில் சமாதி கோவில்.
ஓம்சிவசிவஓம்
Regards
Vijayakumar
Mobile : 96 7711 5690
--
Regards
Vijayakumar
Mobile : 96 7711 5690
No comments:
Post a Comment